innum pesuvom v.siva....
கவிதைகளை எதிர் பாருங்கள் ...
காற்றுக்கு என்ன வேலை
இதைவிட ....
என்னவளின் உலராத கூந்தல்..!
உதிரும் பூக்கள்
ஊர் முழுதும் தூரத்து உறவுகள்
நெகிழ்சியான உறவாடல்களில் நெகிழ்ந்திருந்து ...
வாழ்த்துக்களுடன் பிரிந்து வந்து
நினைவுகளை அசை போட்டு மறக்காமல் விடுமுறையில்
ரயில் ஏறி
ஊர் இறங்கினால் ...
சென்ற முறை வாழ்த்தி அனுப்பிய பெருசிகளில் சில
தவறாமல் உதிர்ந்து போயிருக்கும்...
கவலைப்பட்ட மனசுக்கு பெருசுகள் சொல்லும் ஆறுதல் ....
அடுத்த முறை நீ வரும் போது நானே இருப்பேனோ என்னவோ?
எதையோ ஒன்றை இழந்து மனம் பயணிக்கும் ஊருக்கு...!
இறந்துபோன காதலில்
அவசரத்தில் பிறந்தது....
நச்சுத் தீண்டலில் ....
தென்றலின் பிரசவம் .....
அணைக்கும் போது எல்லாம்
இதயத்தில் வலி ....
பார்க்காத அப்பாவை
நினைத்தும் பார்க்காத மனசு ....
நாளை இந்த குழந்தை
அழும் அம்மாவுக்கு என்பதால்....
தவிக்கத்தான் செய்கிறது மனசு....
எப்போதாவது உயிர்ப்பிக்கும்
உணர்ச்சி கூட
அப்படியே அமிழ்ந்து போகிறது.....
மாதம் தவறாமல்
பணம் வரும் போதெல்லாம்
கூடவே வரும்
கடிதம் சொல்லும்
வாரம் தவறாமல்
தலைக்கு குளி
வயிற்றை காய போடாதே
பணத்தை பற்றி கவலைப்படாதே
கவலையோடு விடுமுறையில்
வீடு போய் பார்த்தால்
அவர்கள் பட்டுக் கொண்டிருப்பார்கள்
தாராளமாக கவலை !
அப்பாவின் மேல்
அத்தனை கோபம்
அந்த வயதில் ....
கனவுகளின்
கட்டுப்பாட்டு அதிகாரி
பால்கனியில் அதிகாரி
பால்கனியில் காதலிக்கு
பாப்கார்ன் தரமுடியாமல் போனது.....
ஜாக்கிசானின் லூஸ் பேண்டை
கனவோடு கலைத்துக்கொண்டது ....
குருட்டு இருட்டில்
திருட்டு உரசல்களின்
உணர்ச்சிக் குளியல்களை
கேட்டது ....பார்த்ததோடு
பாவப்பட்டு போனது.....
அத்தனைக் கோபமும்
அப்படியே அமிழ்ந்து போனது
நான் அப்பாவானபோது....!
தெரியாததும்.....
தீரன் சின்ன மலையை
தெரியும்....
கவுண்டரை
தெரியாதது .....
மாமன்னன்
பெரும் பீடுகை
தெரியும் ....
முத்தரையரை
தெரியாது
பெரியவர் ராமசாமியை
தெரியும் ....
படையாட்சியை
தெரியாது !
யார்
ஆட்சிக்கு வந்தாலும்
ஜாதிகளின் ஆட்சி மட்டும்
கால காலத்துக்கும்
சரித்திரத்தின் பக்கங்களில்
அழுத்தமாக!
சாத்தானின் வாயில்
சமாதனப் புறா ...
அராஜகம் அலங்காரமாய் ஆர்ப்பரிக்க
அமைதியின் தவமாய்...
யுக முடிவில் ஜனித்தாய் நீ...
நீ ஆசைப்பட்டாய்
அரங்கேறியது ...
கேட்ட இடம் கிடைத்தது
எங்கள் உணர்வுகளில்....!
ஆனால்
யுத்தங்களின் முடிவில்
பிணங்களின் குவியல்களில்.....
உன்னுடைய ஜனனத்தில்
எங்களுக்குச் சந்தோசமே !
இருந்தாலும் கூட
சுடுகாட்டு அமைதியை
சுவாசிக்கவா நிகழிந்தன....
இத்தனை மரணங்கள் !
எதிர் வீட்டு பீரோவில்
நூறு ரூபாயை
திருடிக் கொண்டு
ஊரைவிட்டு ஓடிப்போனபோது
தலை குனிந்துக் கொண்ட
அப்பா ....
அரசியல் வாதியாகி
கோடி கோடியாக
கொள்ளையடித்த போது....
தலை நிமிர்ந்து கொண்டார்....
கௌரவம்
இன்டர்நேஷனல் லெவலில்
போய்க்கொண்டிருப்பதாக !
நீயும் கூடத்தான்!
வன்முறை ... கலவர
மத ஆடைகளை
உரித்து விட்டு
நிர்வாணமாய்.....
இந்த நிர்வாணத்திற்க்குதானே
நீயும் ஏங்கினாய் !
நானும் ஏங்கினேன் !
இன்று புதிதாய் பிறந்தோம்
நீயும் கூடத்தான் !
தான் சான் லாவில்
தமிழ் மொழியில் தாலாட்டு
எத்தியோப்பியாவில்
மழலைக்கு முதல் மொழி
அண்டார்டிகாவில்
ஆட்சியில்....!
ஆகாயம் முழுவதும்
அரசாட்சியில் !
நீயும் ஏங்கினாய் !
நானும் ஏங்கினேன் !
இன்று புதிதாய் பிறந்தோம் .
நீயும் கூடத்தான் !
வறுமைக்கு மரணம்...
பஞ்சம், பசி, பட்டினியில்
கல்லறையில் ...
செல்வத்தின் ஆட்சி
செழிப்பாக !
இதற்குத்தானே
நீயும் ஏங்கினாய் !
இன்று புதிதாய் பிறந்தோம்
நீயும் கூடத்தான்!
மனித நேயம்
ஆலமரமாக!
மனித வளம்
ஆகாயமாக !
நீதான் நான்
நான்தான் நீ ...
"என்று " என்ற என் மட்டும் உலகம் முழுவதும்
உலகம் முழுவதும் ...
இதற்குத்தானே
நீயும் ஏங்கினாய் !
நானும் ஏங்கினேன் !
இன்று புதிதாய் பிறந்தோம்
நீயும் கூடத்தான்!
ஆதாமும் ஏவாளும்
விட்டு சென்ற வார்த்தைகளில்
காதல் மட்டும்
இன்னமும் இதழ்களில்
ஈரமாக !
அவ்வப்போது
மனங்களின் உரசல்களில்
ரணமாக!
காற்றும், நீரும்
நிலவும், வானும்
மாசுபட்டுப்போக ...
காதல் மட்டும்
இன்னமும் கறைபடாமல்
காத்திருக்கின்றது....
ஆதாம், ஏவாளுக்காக!
உலகில் விதைக்கப்படும் போது
இறுதியில் முளைத்தவன்தான் நீ
அத்தனையையும் மாசுபடுத்தி
அகரமித்துக் கொண்டு
எதுவுமே தெரியாதவனாய்
மெளனமாக நீ ...
இந்த வனத்தில்
வலம் வரவும்
வானத்தில் சிறகடிக்கவும்
மட்டுமே உரிமை...!
எந்த வனம் இருக்கட்டும்
நீ இல்லாமல் போனால் கூட !
நிர்வாணத்தில்தான்
நிஜம் இருக்கிறது
நிஜத்தை தரிசித்தவன்
நிர்வாணத்தில் திரிந்தவனே...!
முதல் ஆடை பூட்டப்பட்ட அன்றே
மூடப்பட்டது மனசு!
வேற்றுமையை கண்டவன்
வேறுபட்டுப் போனார்கள்
இதயங்களிலும்...!
வேற்றுமையில் மூழ்கிய நிஜம்
நிச்சயம் மீண்டும் ஜனிக்கும்
மீண்டும் நீ நிர்வாணியாகும் போது!
ரெட்டியூர் மாப்பிளைய
அக்காவுக்கு பிடுச்சிருந்தது ...
வாழப்பாடி மாப்பிளைய
தங்கச்சிக்கு புடுச்சிருந்தது ...
போன வாரம் வந்து போன
ஆத்தூர் மாப்பிளையை
எனக்கு ரொம்பவே பிடுச்சிருந்தது ...
ஆனா, என்னமோ...
எல்லா மாப்பிளைகளுக்குமே
அப்பா வாங்கின
மொத்த ரிட்டைர்மென்ட் பணத்தையும்
புடிச்சிருந்ததாலே ...
இப்ப எங்களுக்கென்னமோ
கல்யாணமே புடிக்கல ....!
என்னவனே
என்னவனே ...நீ
சந்திரனில் கால்பதித்தபோது
நான் சந்தோசப்படவில்லை ...
அன்டார்டிகாவை அளந்தபோது
நான் ஆனந்தப்படவில்லை ...
எவரெஸ்ட்ல் ஏறிய போது
பொருட்டாக நான் கொள்ளவில்லை...
என் மனக்குளத்தில்
கல்லெறிந்தபோது தான்...
நான் முழித்துக் கொண்டிருக்கிறேன் ....!